மழை-8, துளி-11 : The Kiss – Tagore

முத்தம் – தாகூர்

மொழிபெயர்ப்பு : கர்ணன்

உதடுகள்   உதடுகளின் காதோடு பேசுகின்றன
இருவரும் குடிக்கிறார்கள் அடுத்தவரின் இதயத்தை,அது   அப்படித்தான் தோன்றுகிறது
தன்னை மறந்த இரு  காதல்கள், வீட்டிலிருந்து வெளியெறிஇதழ்களின்   இணைவால் புனிதப்பயணம் செய்கின்றன
இரு அலைகள்   காதலிட்ட ஆணையால் எழுந்து,உடைந்து   இருஜோடி இதழ்களில் இறந்து போகின்றன
இரு கட்டுக்கடங்கா   ஆசைகள்- இறுதியில்இரு உடல்களின்   எல்லையில் சந்திக்கின்றன
காதல் தன் விருப்பமான   எழுத்துக்களால் பாடல் எழுதுகிறதுமுத்தங்களால்   உதடுகளில் ஒவியமிடுகிறது
இருஜோடி   இதழ்களில் பூக்களின் அறுவடை நிகழ்கிறதுபின்பு மாலையாக   கோர்ப்பதற்க்காக இருக்கலாம்
இந்த இனிய   உதடுகளின் இணைப்பானதுஇரு   புன்னகைகளின் சிவந்த திருமணப் படுக்கையாக இருக்கிறது.

-இரவீந்த்ரநாத் தாகூர்

-தமிழில் : கர்ணன்

மழை-8, துளி-1: கலையாத ஒப்பனைகள்

மழை-8, துளி-1:       கலையாத ஒப்பனைகள்

 நான் முழு மனிதனில்லை –

எனக்குள்ளும் பொய்கள் உண்டு

மெல்லிய புழுக்கள் போல

மனதுக்குள் நெளியும் வன்மம்

 I’m n’t perfect-

I too have lies inside !

Like the thin worms all around

The spite crawls in my mind ! 

கரகரவெனும் குரலில் ஓயாது

காமம் சப்தம் போடும்

வெளியிலே கேட்கா தந்த

வேஷமாய்ப் புனைந்த ஓசை

Raising the tone restlessly,

The Lust clamours hoarsely !

None can hear it out

The Voice which is disguised !

அவலங்கள் நேரில் கண்டால்

என் மனம் பொத்திப் போகும்

எனக்கொரு துன்பம் என்றால்

அணைத்திட ஆட்கள் தேடும் !

                  -அம்ரிதா

 

If any distress near

Quickly mind closes the shutter !

If I’m at misery

It searches the best intimacy !

   – Translated by  Sahara

 

 நன்றி: ‘முள்ளின் நுனியிலும் ஆகாயம்’ கவிதைத் தொகுப்பு

மழை-6-துளி-5: மாற்றம்

மழை-6-துளி-5:   மாற்றம்

மொழிபெயர்ப்பு – கைகாட்டி

நமக்கு என்ன நேருகிறது என்பதை வைத்து அல்லாமல்,

அந்நிகழ்வுகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்

என்பதன் மூலம்தான் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்க்கையின் போக்கில்

நமக்கு என்ன கிடைக்கிறது என்பதால் அல்லாமல்,

நாம் கொண்டுள்ள நல்ல எண்ணங்களின் போக்கினால் மட்டுமே

நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.

நல்ல எண்ணம் ஒரு சங்கிலித்தொடராய்

நல்ல செயல்களை, நல்ல விளைவுகளை ஈட்டித்தரும்.

நல்ல எண்ணம் ஒரு வினையூக்கியாய்,

ஒரு ஒளிப்பொறியாய் செயல்பட்டு,

இயல்பு கடந்த நல்ல விளைவுகளை உருவாக்கும்.

விளைவுகளின் மீது நம் கவனம் குவிந்தால்,

மாற்றம் நிகழாது

மாற்றத்தின் மீது கவனம் கொண்டால்,

தேடியது விளையும்

நாம் மாறுவோம் ,

மாற்றத்தை உருவாக்குவோம்

—————ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு – கைகாட்டி

மழை-4 துளி-1 : நான் தெரிந்து கொண்டேன்

மழை-4 துளி-1

நான் தெரிந்து கொண்டேன் –ஆங்கில மூலம்: ஓமர் பி.வாஷிங்டன்

தமிழில்: கைகாட்டி

நான்  தெரிந்து  கொண்டேன்
உன்னால் யாரையும்  உன்மீது  காதல்  கொள்ளச்  செய்ய முடியாதென்று
உன்னால்  முடிந்ததெல்லாம்  எவருடைய  அன்புக்காவது  பாத்திரமாவது
மீதம்  அவர்களைப்  பொறுத்தது.
நான்  தெரிந்து  கொண்டேன்
நாம்  எவ்வளவுதான்  சிலரின்  நலன்  மீது அக்கறை கொண்டாலும்
அவர்கள்  அதைப்பற்றிக் கண்டு  கொள்வதேயில்லை
நான்  தெரிந்து  கொண்டேன்
நம்பிக்கையை வளர்க்க வருடங்களாகும்
அழிக்கப் போதும் சில நொடிகள்
நான்  தெரிந்து  கொண்டேன்
உன்வாழ்க்கையில்  என்ன  இருக்கிறது  என்பது  முக்கியமில்லை
யார்  இருக்கிறார்கள்  என்பது  முக்கியம்
நான்  தெரிந்து  கொண்டேன்
கால்மணிநேரம்  மகிழ்ச்சியாய்க்  கழித்துவிடலாம்
அதற்குமேலோ  கொஞ்சம்  புரிய  ஆரம்பித்துவிடுகிறது
நான்  அறிந்து  கொண்டேன்
மற்றவர்கள்  செய்ய  முடிந்ததோடு  உன்னை  ஒப்பிடாதே
உன்னால்  முடிவதோடு  மட்டுமே  ஒப்பிடு
நான்  அறிந்து  கொண்டேன்
யாருக்கு  என்ன  நேர்கின்றதென்பதல்ல,
அதனை  அவர்கள்  எப்படிக்  கையாள்கிறார்கள்  என்பது  முக்கியம்
நான்  அறிந்து  கொண்டேன்
எத்தனை  மெல்லியதாக  சீவினாலும்
ஒரு  துண்டிற்கு  இரு பக்கங்கள் உண்டென்று .
நான் அறிந்து கொண்டேன்
அன்புக்குரியவர்களிடம்  எப்பொழுதும்  அன்பான  வார்த்தைகள்  சொல்லிப்  பிரிய வேண்டும்
ஒருவேளை  அதுவே  கடைசிச்  சந்திப்பாகவும்  இருக்கலாம்
நான்  அறிந்து  கொண்டேன்
நாயகன்  என்பவன்  செய்ய வேண்டியதைத்  தேவையான  தருணத்தில்
விளைவுகளைப்  பற்றிக்  கவலைப்படாது  செய்பவன்
நான்  அறிந்து  கொண்டேன்
நீ  கற்பனை  செய்யாத  தூரங்களுக்குக்கூடத்  தடையின்றி சென்று கொண்டிருக்கலாம்.
நான்  அறிந்து  கொண்டேன்
உன்மீது  நிறைந்த  அன்பு  கொண்டவர்கள்  யாரேனுமிருக்கலாம்
அதை  வெளிப்படுத்தும்  முறை  தெரியாமல்.
நான்  அறிந்து  கொண்டேன்
சிலசமயம்  நான்  கோபம்  கொள்வது  என் உரிமை  என்று நினைக்கிறேன்
ஆனால்  வெறியனாகும்  உரிமையை  அது  எனக்கு  எப்போதும்  அளிப்பதில்லை
நான்  அறிந்து  கொண்டேன்
உண்மையான  நட்பு  தூரங்களைக்  கடந்து  வளரும்
உண்மையான  காதலும்  அப்படியே
நான்  அறிந்து  கொண்டேன்
நீ  எதிர்பார்க்கும்  வகையில்  அன்பு  செலுத்தாமல்  இருப்பவரது  அன்பு
முழுமையற்றது  என்பதாகாது .
நான்  அறிந்து  கொண்டேன்
உன்  நண்பன்  எவ்வளவு  நல்லவனாக  இருந்தாலும்  அவ்வப்போது  காயப்படுதல்
தவிர்க்க  முடியாதது,  அவனை  நீ  மன்னிக்கத்தான்  வேண்டும்
நான்  அறிந்து  கொண்டேன்
மற்றவர்களிடம்  மன்னிப்புக்  கிடைப்பது  மட்டுமே  போதுமானது  அன்று
சிலநேரங்களில்  நம்மை  நாமே  மன்னிக்கக்  கற்றுக்கொள்ள  வேண்டியிருக்கிறது
நான்  அறிந்து  கொண்டேன்
உன்  இதயம்  எவ்வளவு  மோசமாக  நொறுங்கியிருந்தாலும்
இவ்வுலகம்  உன்  ஆறுதலுக்காக  நிற்பதில்லை
நான்  தெரிந்து  கொண்டேன்
நம்முடைய  பிண்ணனியும்,  சூழ்நிலையும்  எப்படி  நம்மை  மாற்றினாலும்
நாம்  எப்படி  உருவாகிறோம்  என்பதற்கு  நாமே  பொறுப்பு
நான்  தெரிந்து  கொண்டேன்
விவாதம்  செய்வதால்  மட்டுமே  இருவர்க்கிடையே  அன்பில்லையென்றும்
விவாதம்  செய்யாதிருப்பவர்களிடையே  அன்பு  கொழிக்கிறதென்றும் சொல்ல முடியாது
நான்  தெரிந்து  கொண்டேன்
சிலநேரங்களில்  செயல்களையல்ல,  செய்தவனை  முன்னிறுத்த வேண்டும்
நான்  தெரிந்து  கொண்டேன்
ஒரே  பொருளை  நோக்கும்  இருவர்  முற்றிலும்  வேறுபட்ட  இரு பொருள்களைக் காண  முடியுமென்று
நான்  தெரிந்து  கொண்டேன்
பின்விளைவுகளைப்  பற்றிக்  கவலையற்று  தனக்குத்  தானே  உண்மையாய் நடப்பவர்கள்
வாழ்க்கையில்  முன்னேறிச்  செல்வார்கள்
நான்  தெரிந்து  கொண்டேன்
ஒருசில  மணித்துளிகளில்  உன்  வாழ்க்கை  மாற்றப்படலாம்
முற்றிலும்  உனக்கு  அறிமுகமில்லாதவர்களால்
நான்  தெரிந்து  கொண்டேன்
கொடுக்க  ஒன்றுமில்லை  என்று  நீ  நினைத்திருந்தாலும்
நண்பனொருவன்  வருந்தும்போது  உதவத்  தேவையான  மன  உறுதியை  நீ பெறுவாய்
நான்  தெரிந்து  கொண்டேன்
எழுதுவதும் பேசுவதும்  உன்  மனவலிகளைத்  தீர்க்க  உதவ  முடியுமென்று .
நான்  தெரிந்து  கொண்டேன்
எவரின்மீது  நீ  அதிகம்  அன்பும்  அக்கறையும்  கொண்டிருக்கிறாயோ
அவர்கள்  உன்னிடமிருந்து  சீக்கிரம் பிரிக்கப்படுவார்கள் .
நான்  தெரிந்து  கொண்டேன்
நல்லவனாயும்,  அடுத்தவர்களைக்  காயப்படுத்தாதவனாகவும்  இருப்பதற்கும்
உன்  மனசாட்சிக்கு  உண்மையானவனாக  இருப்பதற்கும்  இடையேயான
எல்லையைத்  தீர்மானிப்பது  மிகவும்  கடினமானதென்று .
நான்  கற்றுக்  கொண்டேன்
அன்பு  செலுத்துவதற்கும்……
அன்பு  கொள்வதற்கும்…….
நான்  கற்றுக்கொண்டேன்…

மழை-3 துளி-8: மழையின் பாடல் – கலீல் ஜிப்ரான்

மழை-3 துளி-8

மழையின் பாடல் – கலீல் ஜிப்ரான்
தமிழில்:கர்ணன்

இறைவன் வானத்திலிருந்து தொங்கவிட்ட
வெள்ளி நூலிழை நான்
என்னை அணைத்து
நிலம், பள்ளத்தாக்குகளை அழகுபடுத்தியது இயற்கை

தோட்டங்களை அழகுபடுத்த
இஸ்தரின் மணிமுடியிலிருந்து
வைகறையின் புதல்வி
பறித்து வீசிய அழகிய முத்துக்கள் நான்

நான் அழுகின்றபோது மலை சிரிக்கும்
என் அமைதி மலர்களுக்கு மகிழ்ச்சி
நான் தலைவணங்கும்போது அனைத்தும் உயரும்

நிலமும் மேகமும் காதலர்கள்
அவர்களுக்கிடையில் நான் அன்புத்தூதுவன்
ஒருவரின் தாகத்தை தீர்க்கிறேன்
இன்னொருவரின் வேதனைக்கு மருந்தாகிறேன்

என்வருகையை இடி முழங்குகிறது
வானவில் எனக்கு விடையளிக்கிறது
தெளிவற்ற பிரபஞ்சத்தின் அடியில் தொடங்கி
மரணத்தின் விரிந்த சிறகுகளின் கீழ் மடியும்
சாதாரண வாழ்வுதான்- என் வாழ்வு

கடலின் இதயத்திலிருந்து வெளியேறி
தென்றலைத் தழுவுவேன்
நிலத்தின் தேவைகண்டு இறங்கி வருவேன்
மலர்கள் மரங்களை
பல ஆயிரம் விதங்களில் அணைத்துக்கொள்வேன்

என் மென்மையான கரங்களால்
சாளரங்களை வருடுகிறேன்
என் உச்சரிப்பு ஒரு வரவேற்புபாடல்
அனைவராலும் கேட்கமுடியும்
ஆனால் உணர்ச்சிமிக்கவர்கள் புரிந்துகொள்கிறார்கள்

காற்றின் வெப்பம் என்னை பிரசவிக்கிறது
ஆனாலும் அதனை கொன்றுவிடுகிறேன்
ஆணிடமிருந்து வலிமைபெற்று
பெண் அவ்னை வெல்வதுபோல்

நான் கடலின் பெருமூச்சு
நிலத்தின் சிரிப்பு
வானத்தின் கண்ணீர்

அதனால் காதலைப்போன்று-நான்
ஆழமான அன்புக்கடலின் பெருமூச்சு
உயிரின் வண்ணமயமான சிரிப்பு
முடிவில்லா ஞாபக வானத்தின் கண்ணீர்